• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோசுல் விடுதலை பற்றி ஈராக் தலைமையமைச்சரின் அறிவிப்பு
  2017-07-11 10:06:50  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐ. எஸ் எனும் அதி தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்து மோசுல் நகர் முற்றிலும் விடுவிக்கப்பட்டுள்ளது என்று ஈராக் தலைமையமைச்சர் ஹைதர் அல் அபாத் 10ஆம் நாள் தெரிவித்தார்.

ஈராக் அரசு அன்று பிற்பகல் பயங்கரவாத எதிர்ப்பு படையின் தலைமையகத்துக்கு வெளியே குறுகிய நேர கொண்டாட்டம் நடத்தியது. அபாத் இதில் உரை நிகழ்த்தினார்.

அப்போது, அபாத் ஈராக் படைக்கும், மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். ஈராக் மக்கள் ஒன்றுபட்டு, பயங்கரவாத எதிர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி, அதி தீவிரவாதிகளால் கட்டுப்படுத்தப்பட்ட நகர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

10ஆம் நாளிரவு, தலைநகர் பாக்தாத், மோசுல் உள்ளிட்ட ஈராக்கின் முக்கிய நகரங்களில் பெருமளவு கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.

மோசுல் நகரை விடுதலை செய்தது, ஈராக்கின் பயங்கரவாத எதிர்ப்பு போரில் பெற்ற மாபெரும் வெற்றியாகவும், ஐ. எஸ் அமைப்பு மீதான கடும் தாக்குதலாகவும் இருக்கின்றது என்று ஈராக்கின் பாதுகாப்புப் பிரச்சினை நிபுணர் அபுதுலா அல் ஜூபோரி தெரிவித்தார். (மீனா) 

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040