• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017 சீன இணைய மாநாடு துவக்கம்
  2017-07-11 16:25:28  cri எழுத்தின் அளவு:  A A A   
2017 சீன இணைய மாநாடு 11ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனத் தொழில் மற்றும் தகவல்மயமாக்கத் துறை அமைச்சர் மியௌ வெய் துவக்க விழாவில் கூறுகையில், ஆக்கத்தொழில் இணையத்துடன் ஆழமான முறையில் ஒன்றிணையும் வளர்ச்சியை எதிர்காலத்தில் முன்னேற்றி, இணைய அடிப்படை வசதிகளின் ஆதரவை வலுப்படுத்தி, இணையம் மற்றும் தகவலைப் பாதுகாக்கும் திறனை அதிகரித்து, புதிய உற்பத்தி முறை மற்றும் புதிய தொழில் வடிவத்தின் வளர்ச்சியை சீனா உத்தரவாதம் செய்யும் என்று தெரிவித்தார்.

விரிவான தொடர்பு, புதிய ஆற்றல், ஒருங்கிணைந்த தொழில்துறை என்பது, 3 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டின் தலைப்பாகும். 20க்கும் மேற்பட்ட ஆண்டுகால ஆய்வு மற்றும் நடைமுறைகளின் மூலம், வசதி, பயன்பாட்டாளர் மற்றும் செயலி துறையில் மேம்பாடுடைய புதிய தொழிலாக சீனாவின் இணையத் தொழில் மாறியுள்ளது என்றும் மியௌ வெய் கூறினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040