• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கத்தார் மீதான தடை நடவடிக்கை தொடரும்
  2017-07-12 09:46:49  cri எழுத்தின் அளவு:  A A A   

பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதைத் தடுப்பது பற்றிய புரிந்துணர்வு குறிப்பாணையில் கத்தாரும், அமெரிக்காவும் 11ஆம் நாள் கத்தார் தலைநகர் தோஹாவில் கையொப்பமிட்டன. கத்தார் வெளியுறவு அமைச்சர் முகமது, அந்நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தில்சனுடன் தோஹாவில் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். இவ்விரு நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு என்ற கட்டுக்கோப்புக்குள் இக்குறிப்பாணையில் கையொப்பமிட்டுள்ளதாக முகமது இக்கூட்டத்தில் தெரிவித்தார். பயங்கரவாத எதிர்ப்புக்கான கடமையை அமெரிக்கா கத்தாருடன் இணைந்து ஏற்க வேண்டும் என்று தில்சன் தெரிவித்தார்.

இக்குறிப்பாணை குறித்து, செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நான்கு நாடுகள் அன்று கூட்டறிக்கையை வெளியிட்டன. கத்தார் இக்குறிப்பாணையைச் செயல்படுத்துவதை நான்கு நாடுகள் கண்காணிக்கும் என்றும், கத்தார் மீதான தடை நடவடிக்கை தொடரும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040