• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம்
  2017-07-12 14:41:52  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் 11ஆம் நாள் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் நடைபெற்றது. தற்போது ஐரோப்பியப் பாதுகாப்புத் துறையில் நிலவும் நெருக்கடி மற்றும் அறைகூவல்களைச் சமாளிப்பது குறித்து பல்வேறு தரப்புகளும் நிலைப்பாட்டை ஒருங்கிணைத்து, அதற்கான தீர்வு திட்டம் பற்றி விவாதித்தன.

இவ்வமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சர் சேபாஸ்தியன் குர்ஸ் இக்கூட்டத்தில் பேசுகையில், இவ்வமைப்பு மற்றும் உறுப்பு நாடுகள் தீவிரவாதம் மற்றும் வன்முறையினால் ஏற்படும் கடும் அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளன. பரந்துபட்ட கலந்தாய்வினை நடத்தி, செயல் அமைப்பு முறையை ஒருங்கிணைப்பது, தற்போதைய அறைகூவல்களைச் சமாளிக்கும் மிக முக்கிய கோட்பாடாகும் என்று தெரிவித்தார். பேச்சுவார்த்தை மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பில் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு, உக்ரைன் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமை மற்றும் முரண்பாட்டை நீக்கி, இவ்வமைப்பின் நம்பிக்கை மீதான நெருக்கடியை அகற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040