2017 பிரிக்ஸ் நாட்டு நட்பு நகரங்கள் மற்றும் உள்ளூர் அரசுகளின் ஒத்துழைப்புக் கருத்தரங்கு 12ஆம் நாள் சீனாவின் செங்து நகரில் துவங்கியது. ரஷியா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் சீனாவின் தொடர்புடைய மாநில மற்றும் நகர அரசாங்கங்களின் பிரதிநிதிகள், நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர். பிரிக்ஸ் நாட்டு உள்ளூர் அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு பற்றி அவர்கள் விவாதித்து வருகின்றனர்.
பிரிக்ஸ் நாடுகளின் உள்ளூர் அரசுகளுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரித்து, ஒத்துழைப்பை ஆழமாக்கி, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு முக்கிய பரிமாற்ற மேடையை வழங்குவது, இக்கருத்தரங்கின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)