• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெட்ரோலிய விலை பற்றி ஓபெக் அமைப்பின் தலைமைச் செயலாளரின் கருத்து
  2017-07-13 09:42:30  cri எழுத்தின் அளவு:  A A A   

பெட்ரோலியக் கையிருப்பு அளவு மேலும் குறையும் என்றும், இவ்வாண்டின் பிற்பாதியில் பெட்ரோலிய விலை உயரும் என்றும் ஓபெக் எனும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலாளர் முகமது பார்கின்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

12ஆம் நாள் துருக்கியின் இஸ்தான்பூலில் நடைபெற்ற 22ஆவது உலக பெட்ரோலிய மாநாட்டில் அவர் இதைத் தெரிவித்தார். இவ்வாண்டின் முற்பாதியில் பெட்ரோலியச் சந்தை நிலைமை மிகவும் சிக்கலாக இருந்தது. பெட்ரோலிய உற்பத்தி குறைப்பு உடன்படிக்கையைப் பல்வேறு தரப்புகள் உறுதியாகச் செயல்படுத்தியுள்ளன. பெட்ரோலிய தேவை மீதான காலமுறை குறைப்பு, ஓபெக் அமைப்புக்கு அப்பால் உள்ள பெட்ரோலிய உற்பத்தி நாடுகளின் வினியோகம் உயர்வு ஆகியவை காரணமாக, ஓபெக் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது. இது, உலக பெட்ரோலியச் சந்தையின் நிதானத்தைக் கடுமையாக பாதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மந்தமான நிலையில் இருக்கும் பெட்ரோலிய விலையின் உயர்வைத் தூண்டும் வகையில், ஓபெக் அமைப்பின் உறுப்பு நாடுகளும், இவ்வமைப்புக்கு அப்பால் உள்ள பெட்ரோலிய உற்பத்தி நாடுகளும் கடந்த ஆண்டு உருவாக்கிய உற்பத்தி குறைப்பு உடன்படிக்கையை உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040