• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கியில் 7600 படைவீரர்களுக்கு பதவி நீக்கம்
  2017-07-13 10:26:58  cri எழுத்தின் அளவு:  A A A   

கடந்த ஆண்டு துருக்கியில் தோல்வியடைந்த ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின், குலென் இயக்கத்தில் பங்கெடுத்ததாக ஐயப்பட்டத்தக்க சுமார் 7600 படைவீரர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் 12ஆம் நாள் தெரிவித்தன.

இந்த 7600 பேரில், 150 தளபதிகள் இடம்பெற்றுள்ளனர். தவிர, வேறு 786 படைவீரர்களின் பதவி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று துருக்கி தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றை மேற்கோள் காட்டி, அனாடோலு செய்தி நிறுவனம் அன்று தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஜூலை 15ஆம் நாள், துருக்கியில் தோல்வியடைந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தது. இதில் சுமார் 250 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் தங்கியிருக்கும் மதப் பிரமுகர் குலென் இந்த ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குச் சதிசெய்த முக்கிய நபர் என்று துருக்கி அரசு குற்றஞ்சாட்டி, அவரது தலைமையிலான குலென் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040