• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் இணைய நிதித் துறையின் வளர்ச்சி
  2017-07-13 10:46:17  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் இணைய நிதித் துறை, உலக அளவில் முதலிடம் வகிப்பதாக சீனத் தேசிய இணைய நிதித்துறை சிறப்பு தொழில் நுட்பக் குழுவின் தலைவர் சோ ஹுங் ரேன் அண்மையில் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு சீன இணைய நிதித்துறையின் பாதுகாப்பு பற்றிய உயர் நிலை கருத்தரங்கில் அவர் இதைத் தெரிவித்தார்.
சீனத் தேசிய இணைய நிதித் துறையின் ஆபத்து பகுத்தாராய்ச்சி தொழில் நுட்ப மேடை வெளியிட்ட கண்காணிப்பு தரவுகளின்படி, சீனாவில் மொத்தம் 19 ஆயிரம் இணைய நிதி மேடைகள் உள்ளன. தற்போதைய இணைய நிதித்துறையில், இணையக் கடன், இணைய சொத்து நிர்வாகம், இணையம் மூலம் நிதி திரட்டல் ஆகிய 21 வகைகள் இடம்பெறுகின்றன. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040