• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலக மரபுச் செல்வ மாநாடு நிறைவு
  2017-07-13 14:04:07  cri எழுத்தின் அளவு:  A A A   

41ஆவது உலக மரபுச் செல்வ மாநாடு 12ஆம் நாள் போலந்தின் கராகோவ் நகரில் நிறைவடைந்தது. சீனாவின் சிங்காய் மாநிலத்தின் ஹோஹ் ஹில் மற்றும் ஃபூ ஜியங் மாநிலத்தின் குலாங்யூ தீவு உள்ளிட்ட உலகின் 21 இடங்கள் உலக மரபுச் செல்வப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இது வரை இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள உலக மரபுச் செல்வ இடங்களின் மொத்த எண்ணிக்கை, 1073ஆகும். உலகின் 167 நாடுகளைச் சேர்ந்த இம்மரபுச் செல்வ இடங்களில், 814 பண்பாட்டு மரபுச் செல்வங்களும், 224 இயற்கை மரபுச் செல்வங்களும், 35 இயற்கை மற்றும் பண்பாட்டு இரட்டை மரபுச் செல்வங்களும் இடம்பெற்றுள்ளன. இது வரை சீனாவின் 52 மரபு செல்வங்கள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

11 நாட்கள் நீடித்த இம்மாநாட்டில், உலக மரபுச் செல்வங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருட்களின் பாதுகாப்பு, சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சி முதலியவை பற்றி விவாதிக்கப்பட்டது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040