• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேட்டோ-ரஷிய தொடர்பு பற்றி நேட்டோ தலைமைச் செயலாளரின் கருத்து
  2017-07-14 10:38:44  cri எழுத்தின் அளவு:  A A A   

நேட்டோ-ரஷியச் செயற்குழுவின் தூதர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெற்றது. உக்ரைன் நிலைமை, ஆப்கான் பிரச்சினை முதலியவை பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர்.

நேட்டோ தலைமைச் செயலாளர் ஜீன்ஸ் ஸ்டோல்டேன்பெர்க் இக்கூட்டத்துக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இரு தரப்பும் மனம் திறந்த, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தின என்றும், நேட்டோவும், ரஷியாவும் தங்கு தடையற்ற தொடர்பு வழிமுறையை நிலைநிறுத்துவது, இரு தரப்புக்கும் மிக முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

உக்ரைன் நிலைமை குறித்து, இரு தரப்புக்குமிடையே அடிப்படை ரீதியான கருத்து வேற்றுமை இன்னமும் நிலவுகின்றது. ஆப்கான் பிரச்சினை குறித்து, ஆப்கானின் நிதானம், இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்கான் அரசுக்கு ஆதரவளிப்பது, நேட்டோ மற்றும் ரஷியாவின் பொது நலன்களுக்குப் பொருந்தியதாக இருக்கின்றது என்று ஸ்டோல்டேன்பெர்க் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040