• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேட்டோவின் உறுப்பு நாடுகளில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சி
  2017-07-14 10:51:48  cri எழுத்தின் அளவு:  A A A   

நேட்டோவின் ராணுவக் குழுத் தலைவர் பிடேர் பாவேல் 13ஆம் நாள் ருமேனியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அந்நாட்டில் நடைபெற்று வரும் சபர் கார்டியன் 2017 எனும் ராணுவ பயிற்சியில் அவர் கலந்து கொள்வார்.

ருமேனியத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்பிடி, இந்த ராணுவ பயிற்சி ஜூலை 11 முதல் 20ஆம் நாள் வரை, பல்கேரியா, ருமேனியா, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற்று வருகின்றது. நேட்டோவின் 22 உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் படைவீரர்கள் இந்த ராணுவ பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஐரோப்பியப் பிரதேசப் படைப்பிரிவுகளின் விரைவான அணித்திரட்டல் சக்தியையும், அவற்றின் எச்சரிகை அச்சுறுத்தல் சக்தியையும் வெளிப்படுத்துவது இப்பயிற்சியின் நோக்கமாகும்.

இவ்வாண்டு கருங்கடற்பரப்பில் 18 முறைகள் ராணுவ பயிற்சியை நேட்டோ நடத்தியுள்ளது. 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் படைவீரர்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டுள்ளனர். சபர் கார்டியன் 2017 எனும் ராணுவ பயிற்சி, இவற்றில் அளவில் மிக பெரிய ஒன்றாகும். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040