• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நந்நீர் வினியோகம் பற்றிய பாலஸ்தீன-இஸ்ரேல் உடன்படிக்கை
  2017-07-14 12:42:15  cri எழுத்தின் அளவு:  A A A   

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தூய்மையான நீர் வினியோக உடன்படிக்கையை உருவாக்கியுள்ளன. பாலஸ்தீனத்தின் நீர் வள நெருக்கடியைத் தணிவு செய்யும் வகையில், இஸ்ரேல் 3 கோடியே 20 லட்சம் கன மீட்டர் குடிநீரை பாலஸ்தீனத்துக்கு விற்பனை செய்யும். பாலஸ்தீன-இஸ்ரேல் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசுத் தலைவரின் சிறப்பு பிரதிநிதி ஜாசன் க்ரீப்லாத் 13ஆம் நாள் இதைத் தெரிவித்தார்.

இவ்வுடன்படிக்கையின்படி, 2 கோடியே 20 லட்சம் கன மீட்டர் நீர் ஜோர்டான் ஆற்றின் மேற்கு கரைக்கு வினியோகிக்கப்படும். ஒரு கோடி கன மீட்டர் நீர், காசா பிரதேசத்துக்கு வினியோகிக்கப்படும்.

இவ்வுடன்படிக்கையின்படி, ஜோர்டான் ஆற்றின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேநின் நகருக்கு வழங்கும் நீரின் அளவு பெரிதும் அதிகரிக்கப்படும். பாலஸ்தீனமும், இஸ்ரேலும் ஒத்துழைப்பு மூலம், பாலஸ்தீன மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த முடியும் என்பதை இது வெளிப்படுத்துவதாக ஜாசன் க்ரீப்லாத் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோக்லமில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் – இந்திய நிபுணர்
• எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல் – இந்திய தூதருக்கு பாகிஸ்தான் அழைப்பு
• இந்தியாவில் ஹெச்1என்1 வைரஸ் பரவல் 600 பேர் உயிரிழப்பு
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040