• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் நிதி வருவாய் அதிகரிப்பு
  2017-07-14 15:59:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன நிதி அமைச்சகம் 14ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டு ஜனவரி முதல் ஜுன் திங்கள் வரை சீனாவின் பொது வரவு செலவுக்கான வருவாய் 9 லட்சத்து 43 ஆயிரத்து 60 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 9.8 விழுக்காடு அதிகரித்தது. இதில் வரி வருமானம் 8 லட்சத்து 740 கோடி யுவானை எட்டி, 10.9 விழுக்காடு அதிகரித்தது.

இவ்வாண்டின் முற்பாதியில் சீன நிதி வருமானத்தின் வேகமான அதிகரிப்பு, சீனப் பொருளாதாரச் செயல்பாடு சீராகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. தொழில்துறை உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு, தொழில் நிறுவனங்களின் லாப நிலை மேம்பாடு, ஏற்றுமதி பொருட்களின் விலை மற்றும் எண்ணிக்கை உயர்வு உள்ளிட்ட பல காரணிகளின் விளைவும் இதுவாகும் என்று நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040