• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலநிலை மாற்றம் பற்றிய ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கை
  2017-07-15 17:44:43  cri எழுத்தின் அளவு:  A A A   
உலகின் பல்வேறு நாடுகள், கால நிலை மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தால், 21ஆவது நூற்றாண்டின் இறுதியில், ஆசியக் கண்டத்தின் தட்ப வெட்ப நிலை 6 திகரி செல்சியஸ் அதிகரிக்கும். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுக்கு இது கடும் தீங்கு விளைவிக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் ஜெர்மனி போட்ஸ்டாம் காலநிலைக்கான ஆய்வகம் ஜூலை 14ஆம் நாள் பிலிப்பைன்ஸில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையின்படி, 21ஆவது நூற்றாண்டின் இறுதியில் ஆசிய-பசிபிக் பிரதேசத்திலுள்ள தட்ப வெட்ப நிலை அதிகமாக உயரும். எடுத்துக்காட்டாக, தாஜிக்ஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனாவின் வடமேற்கு பகுதி ஆகிய பிரதேசங்களில், தட்ப வெட்ப நிலை 8 திகரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று இவ்வறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 21ஆவது நூற்றாண்டின் இறுதியில், ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பெரும் பகுதியில், சூறாவளி மற்றும் வெட்ப மண்டல சூறாவளி நிகழும் வாய்ப்பு 50 விழுகாடு அதிகரிக்கும். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மழை அளவு, 20-50 விழுகாடு குறையும். இத்தகைய மாற்றம், இப்பிரதேசம் மற்றும் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும். சீனாவின் குவாங்சோ, தியான்ஜின், இந்தியாவின் மும்பை, சென்னை உள்ளிட்ட 20 நகரங்கள், உலகளவில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி சுட்டிக்காட்டியது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதிக்குழுத் தலைவர்களுடன் ஷீ ச்சின்பிங்கின் சந்திப்பு
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை பற்றிய கருத்துரு அமெரிக்க செனெட் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
• அக்சா மசூதியில் மோதல்
• பிரிக்ஸ்நாடுகளின் பாதுகாப்பு அலுவல் பற்றிய உயர் நிலை பிரதிநிதி கூட்டம்
• பிரிக்ஸ் நாடுகளின் செய்தித் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்
• வரித் துறை ஒத்துழைப்பு பற்றி பிரிக்ஸ் நாடுகளின் முதலாவது குறிப்பாணை
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040