• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேபாளம்-ஜிபூட்டி இடையேயான தூதாண்மை உறவு தொடக்கம்
  2017-07-16 15:52:31  cri எழுத்தின் அளவு:  A A A   

நேபாளத்துக்கும் ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டிக்கும் இடையேயான தூதாண்மை உறவு அதிகார்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதாக, இரு நாடுகளும் ஜுலை 15ஆம் நாள் அறிவித்துள்ளன. ஐ.நா.வுக்கான நேபாளத்தின் பிரதிநிதியும், ஐ.நா.வுக்கான ஜிபூட்டி குடியரசின் பிரதிநிதியும் 15ஆம் நாள் மாலை நியூயார்க்கில் தொடர்புடைய ஆவணத்தில் கையெழுத்திட்டனர். மேலும், இரு தரப்புறவு மற்றும் பல தரப்பு உறவை ஆழப்படுத்துவது குறித்தும் இரு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், அமைதி, வளர்ச்சி மற்றும் பொதுவான செழுமையை நனவாக்க பாடுபடவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இது வரை, நேபாளத்துடன் தூதரக உறவை உருவாக்கிய நாடுகளின் எண்ணிக்கை 147ஐ எட்டியது. கடந்த சில ஆண்டுகளில், நேபாளம் வெளியுறவை வளர்ப்பதில் பல சாதனைகளைப் பெற்றுள்ளது. இவ்வாண்டு ஜுன் 13, ஜுன் 17 ஆகிய நாட்களில், நேபாளம் அடுத்தடுத்து உகாண்டா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளுடன் தூதாண்மை உறவை நிறுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிபூட்டி, ஆப்பிரிக்காவின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள ஏடன் வளைகுடாவின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. நேபாளமும், ஜிபூட்டியும், அணி சாரா இயக்கத்தின் உறுப்பு நாடுகளாகவும் 77 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகளாகவும் விளங்குகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040