• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன தேசிய நிதி பணிக் கூட்டம்
  2017-07-17 15:42:18  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன நிதித் துறையில் மிக உயர் நிலைக் கூட்டமான தேசிய நிதி பணிக் கூட்டம் அண்மையில் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டம், ஒவ்வொரு முறையும் நடப்பு மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில் சீனாவின் நிதி பணிக்கு பன்முக ஏற்பாடு செய்து வருகிறது. உண்மை பொருளாதாரத்துக்கு சேவை செய்வது, நிதி இடர்ப்பாட்டைத் தடுத்து கட்டுப்படுத்துவது, நிதித் துறை சீர்திருத்தத்தை ஆழமாக்குவது ஆகிய மூன்று பணிகளை இந்த முறை நடைபெற்ற கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. அதோடு, சீன அரசவை நிதி நிதான மற்றும் வளர்ச்சி ஆணையத்தை உருவாக்கவும் இக்கூட்டம் தீர்மானித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த முறையில் மேலாண்மை மற்றும் அமைப்பு சார் இடர்ப்பாட்டுத் தடுப்பில் மத்திய வங்கியின் கடப்பாடுகளையும் இக்கூட்டம் வலுப்படுத்தியுள்ளது.

நிதி பணிகளை செவ்வனே செய்வதில், 4 முக்கிய கோட்பாட்டுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. அதில், முதலாவதாக, ஊற்றுமூலத்துக்குத் திரும்பி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சேவை புரிவதை கீழ்ப்படிய வேண்டும். இரண்டாவதாக, கட்டமைப்பை மேம்படுத்தி, நிதி சந்தை, நிறுவனம் மற்றும் உற்பத்திப் பொருக்டளின் தொகுதியை முழுமைப்படுத்த வேண்டும். மூன்றாவதாக, கண்காணிப்பை வலுப்படுத்தி, நிதி இடர்ப்பாட்டைக் கையாளும் ஆற்றலை உயர்த்த வேண்டும். நான்காவதாக, சந்தையை வழிக்காட்டியாகக் கொண்டு, நிதி மூலவளத்தின் ஒதுக்கீட்டில் சந்தையின் தீர்மான பங்கு ஆற்ற வேண்டும்.

சீன சர்வதேச பொருளாதார பரிமாற்ற மையத்தின் துணை பொது பொருளியலாளர் சூஹோங்சை பேசுகையில், இந்த மூன்று பணிகளில், உண்மை பொருளாதாரத்துக்கு சேவை புரிவது, அடிப்படையாகும் என்று கூறினார்.

சீன ரென்மின் பல்கலைக்கழக சொங்யாங் நிதி ஆய்வகத்தின் ஆய்வாளர் டோங்சிமியாவின் கருத்தில், கடந்த 50 ஆண்டுகளாக, நிதித் துறை வளர்ச்சி மற்றும் புத்தாக்கம், உண்மை பொருளாதாரத்துக்குச் சேவை புரிவது என்ற ஊற்று மூலத்திலிருந்து விலகுவது, சில நாடுகளில் நிதி நெருக்கடிகள் நிகழ்ந்ததற்கான காரணமாகும் என்று அவர் தெரிவித்தார்.

நிதி துறையில் வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்க வேண்டும். ரென்மின்பி மாற்றுவிதிகத்தை உருவாக்கும் அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை ஆழமாக்கி, அதன் சர்வதேச மயமாக்கத்தை நிதானமாக முன்னேற்ற வேண்டும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கான நிதி துறை புத்தாகத்தைத் தூண்டி, தொடர்புடைய அமைப்பு முறையின் வடிவமைப்பை நன்றாக மேற்கொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040