• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நடுவண் அரசின் நிதி மற்றும் பொருளாதாரத் தலைமைக் குழுக் கூட்டம்
  2017-07-18 09:02:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், நடுவண் அரசு நிதி மற்றும் பொருளாதாரத் தலைமைக் குழுத் தலைவருமான ஷிச்சின்பிங், 17ஆம் நாள் பிற்பகல், நடுவண் அரசு நிதி மற்றும் பொருளாதாரத் தலைமைக் குழுவின் 16ஆவது கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். முதலீடு மற்றும் சந்தை சூழலை மேம்படுத்துவது, வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் இக்கூட்டத்தில் ஆராய்ந்து விவாதிக்கப்பட்டன. ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்திய போது, முதலீடு மற்றும் சந்தை சூழலை மேம்படுத்தி, வெளிநாட்டுத் திறப்பை விரைவுபடுத்த வேண்டும். சந்தை செயல்பாட்டின் செலவைக் குறைத்து, நியாயமான வெளிப்படையான மதிப்பிடக் கூடிய வணிகச் சூழலை உருவாக்க வேண்டும். திறப்புத் தன்மை வாய்ந்த புதிய பொருளாதார அமைப்பு முறையின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040