• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா மேற்கொள்ளும் தடை நடவடிக்கைக்கு ஈரானின் பதிலடி
  2017-07-20 09:47:43  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரான் மீது அமெரிக்கா மேற்கொள்ளும் புதிய தடை நடவடிக்கைகளுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு அரசுத் தலைவர் ஹசன் ருஹானி 19ஆம் நாள் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்தார்.

அமரிக்காவின் செயல் ஈரான் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையை மீறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் மற்றும் இப்பிரதேசத்திலுள்ள இதர முஸ்லிம் நாடுகள் மீது பகைமை நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்பு மற்றும் தனிநபருக்கு ஈரான் பதிலடியாக புதிய தடை விதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040