• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முதல் சுற்று சீன-அமெரிக்க பன்முக பொருளாதார பேச்சுவார்த்தை
  2017-07-21 13:03:26  cri எழுத்தின் அளவு:  A A A   
முதல் சுற்று சீன-அமெரிக்க பன்முக பொருளாதார பேச்சுவார்த்தை 19ஆம் நாள் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்றது. சீன துணைத தலைமையமைச்சர் வாங்யாங், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் டெர்னர் ம்னுசின், அமெரிக்க வணிக அமைச்சர் வில்பர் ரோஸ் ஆகியோர் இதற்குத் தலைமை தாங்கினர். சேவைத் துறை, சீன-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்புக்கான 100 நாள் மற்றும் ஓர் ஆண்டு திட்டங்கள், உலக பொருளாதாரம் மற்றும் மேலாண்மை, ஒட்டுமொத்த பொருளாதார கொள்கை, வர்த்தகம் மற்றும் முதலீடு முதலியவை பற்றி இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். எதிர் தரப்பின் கொள்கைகள் மீதான புரிந்துணர்வை பயனுள்ளதாக அதிகரித்து, கருத்து வேற்றுமை மீதான புரிந்துணர்வை ஆழமாக்கி, பிரச்சினையைத் தீர்க்கும் நிரல் மற்றும் நெறிவரைத்திட்டத்தை ஆய்வு செய்தனர். சில பிரச்சினைகளில் அவர்கள் பொது கருத்தை உருவாக்கியுள்ளனர். பேச்சுவார்த்தை எதிர்பார்த்த இலக்கை எட்டியுள்ளது.(ஜெயா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040