• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
  2017-07-23 15:55:58  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவை உணர்வது—பிரிட்டனில் சீனாவின் மேற்குப் பகுதி பண்பாட்டுப் பரப்புரை என்ற நடவடிக்கை 22ஆம் நாள் ஸ்காட்லாந்தின் தலைநகர் ஏடின்பெர்கில் நடைபெற்றது. இதில், நிபுணர்களின் கலந்துரையாடல் கூட்டம், நிழற்படக் கண்காட்சி, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட வடிவங்களின் மூலம், சீனாவின் மேற்குப் பகுதியின் வண்ணமயமான பண்பாடு, வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் அறிமுசம் செய்யப்பட்டன.

ஏடின்பெர்க்கிலுள்ள சீனத் துணை நிலை தூதர் பென் சின்சுன் இந்நடவடிக்கைக்கான உபசரிப்பு கூட்டத்தில் பேசிய போது, சீனாவின் மேற்குப் பகுதி, சீனப் பண்பாட்டின் முக்கிய பிறப்பிடமாகும். மேற்குப் பகுதி வளர்ச்சி திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, பல்வேறு துறைகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ள இப்பகுதி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. நடப்பு பண்பாட்டு நடவடிக்கை வண்ணமிகு சீனப் பண்பாட்டை வெளிப்படுத்தி, சீன-ஸ்காட்லாந்து நட்புறவின் வளர்ச்சியை முன்னேற்றும் என்று கூறினார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040