• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
  2017-07-24 10:28:13  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானில் கைது செய்யப்பட்ட ஒரு அமெரிக்கரை விடுவிக்க வேண்டும் என்ற அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இது ஈரானின் உள் விவகாரங்களில் தலையீடுவதாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் 23ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாட்டியது. ஈரானின் தேசியப் பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அத்துமீறியவரின் மீது ஈரான் சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்படுவார். அமெரிக்காவின் தலையீடு மற்றும் அச்சுறுத்தல் அறிக்கையினால் இது மாறாது என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டது. உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒரு அமெரிக்கர் ஈரான் நீதி மன்றத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டின் நீதி துறை செய்தித் தொடர்பாளர் 16ஆம் நாள் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது. (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040