• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் பி.எம்.ஐ குறியீடு குறைந்துள்ளது
  2017-08-02 09:53:19  cri எழுத்தின் அளவு:  A A A   

புதிய புள்ளி விபரங்களின்படி, ஜூலை திங்கள் இந்தியாவின் ஆக்கத் தொழிற்துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு ஜுன் திங்களில் இருந்த 50.9யிலிருந்து 47.9ஆக குறைந்துள்ளது. 2009ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் தொடங்கி மிகக் குறைந்த பதிவு இதுவாகும்.

பி.எம்.ஐ எனும் இக்குறியீடு பெரிதும் குறைந்தது, ஜூலை முதல் இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வரத் துவங்கியதுடன் தொடர்புடையது. இப்புதிய வரி அமைப்பு முறையின் படி, வணிகப் பொருட்களின் வரி விகிதம் முறையே 5, 12, 18, 28 விழுக்காடு என நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புதிய வரி அமைப்பு முறையின் தெளிவின்மைத்தன்மை, பல வரி விகிதங்களைக் கொண்டுள்ள வரி வசூலிப்பு கட்டமைப்பு ஆகியவற்றினால், நிறுவனங்கள் வணிகப் பொருட்களின் விலையை உறுதிப்படுத்திய போது குழப்பம் ஏற்பட்டது. இதனால் உற்பத்தி மற்றும் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040