• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க வான் படையின் ஏவுகணை சோதனை
  2017-08-03 11:36:35  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க வான் படை 2ஆம் நாள் கலிபோர்னிய மாநிலத்தின் வென்டேன்பெர்க் வான் படை தளத்திலிருந்து மினுட்மேன் 11 எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிவிசை ஏவுகணையை சோதனை முறையில் செலுத்தியது. இவ்வாண்டு அமெரிக்கா இந்த வான் படை தளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் எறிவிசை ஏவுகணையை செலுத்துவது இது நான்காவது முறையாகும்.

4200 மைல் பறந்த பிறகு, இந்த ஏவுகணை பசிபிக் பெருகடலின் மார்ஷெல் தீவுக்கூட்டத்தின் இலக்கான குவாஜலெய்ன் அடோலில் கடற்பரப்பில் விழுந்தது. சோதனை சாதனங்கள் இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க வான் படையின் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையின் போரிடும் ஆற்றலை இச்செலுத்தல் சோதனை செய்து, அமெரிக்காவின் அணு ஆற்றலின் பாதுகாப்புத்தன்மை மற்றும் பயனை வெளிப்படுத்தியுள்ளது. இச்செலுத்தலில் பெறப்பட்ட தரவுகள், அமெரிக்காவின் அணு ஆற்றலின் வளர்ச்சிக்குத் துணை புரியும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040