• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-இந்திய எல்லை பிரச்சினை பற்றி வரலாற்றில் இரு தரப்புகளின் தொடர்புகள்
  2017-08-03 16:07:02  cri எழுத்தின் அளவு:  A A A   

1, 1959ஆம் மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு சீனத் தலைமை அமைச்சர் சோ என்லாய்வுக்கு அனுப்பிய கடிதத்தில், இந்தியாவின் பாதுகாப்பிலுள்ள சிக்கிமிற்கும் சீனாவின் திபெத்துக்கும் இடையிலான எல்லை, 1890ஆம் ஆண்டில் பிரிட்டன்-சீன உடன்படிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இது 1895ஆம் ஆண்டு தரைவழியில் வகுக்கப்பட்ட ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.

2, 1959ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்களின் 26ஆம் நாள் இந்திய தலைமை அமைச்சர் சவகர்லால் நேரு சீனத் தலைமை அமைச்சர் சோ என்லாய்வுக்கு அனுப்பிய கடிதத்தில், 1890ஆம் ஆண்டின் உடன்படிக்கையின்படி சிக்கிம்-திபெத் எல்லை உறுதி செய்யப்பட்டது. இது 1895ஆம் ஆண்டு நடைமுறையில் வகுக்கப்பட்டது. எனவே, இப்பகுதியில் சர்ச்சை எதுவும் இல்லை என்று எழுதியிருந்தார்.

3, 1960ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் சீனாவிலுள்ள இந்திய தூதகரம் சீன வெளியுறவு அமைச்சகத்தக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் சிக்கிமிற்கம் சீனத் திபெத்துக்கும் இடையிலான எல்லை பற்றி சர்ச்சை எதுவும் இல்லை என்று சீனத் தரப்பு குறிப்பிட்டதை இந்தியா இக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், இந்த எல்லை கோடு நடைமுறை தரையில் வகுக்கப்பட்டுள்ளதை இந்திய தரப்பும் உறுதி செய்துள்ளது என்றும் இக்கடிதத்தில் கூறப்பட்டது.

4, 2006ஆம் ஆண்டு மே திங்கள் 10ஆம் நாள் சீன-இந்திய எல்லை பிரச்சினை தொடர்பாக சிறப்புப் பிரதிநிதிகளின் பணி கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியத் தரப்பு முன்வைத்த ஆவணம் ஒன்றில், இரு நாட்டு எல்லையின் சிக்கிம் பகுதி இரு தரப்புகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040