• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க-ரஷிய உறவு
  2017-08-04 10:47:17  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க-ரஷிய உறவு வரலாற்றில் மிகத் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 3ஆம் நாள், சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தால்தான், இரு தரப்புறவு தற்போதைய நிலையில் சிக்கலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செயலைக் கண்டித்துள்ளார்.
இதற்கு முன்பாக, ரஷியா, ஈரான், வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மீதான தடை கருத்துருவில் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார். இந்த கருத்துரு ஜூலை திங்களின் பிற்பாதியில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் பெரும் வாக்கு வித்தியாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040