• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்திய செய்தி ஊடகங்களுக்கு சீனத் தூதரக அமைச்சரின் அனுமுகம்
  2017-08-04 12:35:48  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவுக்கான சீனத் தூதரகத்தின் அமைச்சர் லியு ஜின் சுங் 3ஆம் நாள் தி இந்து, நியூ இந்தியன் டைம்ஸ், ஆசியன் ஏஜ், டெக்கான் ஹெரால்டு ஆகிய செய்தித்தாட்கள் மற்றும் தி வயர் என்னும் இணைய இதழ் உள்ளிட்ட இந்திய செய்தி ஊடகங்களின் செய்தியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதோடு, சீன வெளியுறவு அமைச்சகம் ஆகஸ்ட் 2ஆம் நாள் வெளியிட்ட நிலைப்பாட்டு ஆவணத்தைப் பற்றியும் அவர் செய்தியாளர்களுக்கு பன்முகங்களிலும் விளக்கிக் கூறினார்.

இந்தியப் படைவீரர்கள் சீன எல்லையில் நுழைந்த சம்பவம் பற்றிய சீனாவின் நிலைப்பாட்டை வரலாறு, சட்டம், பன்னாட்டு உறவு உள்ளிட்ட பல கோணங்களிலிருந்து இந்த ஆவணம் பன்முகங்களிலும் விவரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தனது தவற்றை திருத்திக் கொள்வதற்கான் எந்த ஒரு செயலையும் இந்திய தரப்பு மேற்கொள்ளாமல் இருக்கிறது என்றும், இந்தியா உடனடியாக நிபந்தனையின்றி சீன எல்லையிலிருந்து தனது படைவீரர்களை அழைத்து கொள்ள வேண்டும் என சீனா மீண்டும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது சர்வதேச சட்ட ஒழுங்கு, சர்வதேச உறவுக் கோட்பாடு மற்றும் சர்வதேச நீதியையும் பேணிகாப்பதாற்காகும் என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040