• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியா:அமெரிக்காவுடன் இயல்புப் பேச்சுவார்த்தையை மீட்க கூடும்
  2017-08-07 09:25:13  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்கா எதிர்ப்பு மனப்பான்மையைக் கைவிட்டால் மட்டுமே, அதனுடன் இயல்புப் பேச்சுவார்த்தையை ரஷியா மீண்டும் துவக்கும் என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தெக்ஸ் டில்லார்ச்சனுடன் 6ஆம் நாள் பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவில் இரு தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்திய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு லாவ்ரோவ் செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், தாம் டில்லர்ச்சனுடன் நீண்டகாலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அமெரிக்காவின் தடை நடவடிக்கைக்கான ரஷியாவின் எதிர் நடவடிக்கைகளின் விபரங்களை டிஸ்ஸர்சன் அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, அமெரிக்காவுடன் இயல்புப் பேச்சுவார்த்தையை மீட்க மாஸ்கோ தயாராக உள்ளது. வாஷிங்டன் அதன் எதிர்ப்பு மனப்பான்மையைக் கைவிடுவது அதற்கான முன்நிபந்தனையாகும் என்று ரஷிய தரப்பு தெரிவித்துள்ளது. (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040