• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டார்ஜிலிங் ஹிமாலயன் ரெயில்வே உள்ளூர் மோதலில் பாதிக்கப்படக் கூடும்:யுனேஸ்கோ கவலை
  2017-08-07 15:45:14  cri எழுத்தின் அளவு:  A A A   
மேற்கு வங்கத்தில் குர்கா இனத்தவருக்கும் அரசுக்கும் இடையில் ஏற்படும் மோதலினால் இந்தியாவின் டார்ஜிலிங் ஹிமாலயன் ரெயில்வே உலக மரபுச் செல்வப் பட்டியலிலிருந்து வெளியேற்றப்படும் வாய்ப்புள்ளது என்று யுனேஸ்கோ அமைப்பு அண்மையில் கவலை தெரிவித்துள்ளது.
இப்பிரதேசத்தில் ஏற்படும் வேலை நிறுத்தத்தினால் டார்ஜிலிங் ஹிமாலயன் ரெயில்வே பாதிக்கப்படும் நிலை குறித்து 2018ஆம் ஆண்டு நடைபெறும் உலக மரபுச் செல்வக் கமிட்டியின் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் என்று புது தில்லியிலுள்ள யுனேஸ்கோவின் அலுவலர் மொய் ச்சிபா கூறினார்.
ஜுன் திங்கள் முதல் குர்கா மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் டார்ஜிலிங் பிரதேசத்தில் காலவரம்பில்லா வேலை நிறுத்தம் மற்றும் ஆர்பாட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கடைகள், விடுதிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் சுற்றுலாத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பொம்மை ரயில் சேவையையும் உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இடைநிறுத்தினர். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கார்பன் நடுநிலை நனவாக்கும் சியாமென் உச்சி மாநாடு
• ஆப்கானுக்கான அமெரிக்காவின் புதிய கொள்கை
• வட கொரியா:தென் கொரிய-அமெரிக்க ராணுவப் பயிற்சிக்குக் கண்டனம்
• பாகிஸ்தான் ராணுவ வட்டாரம் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
• இந்திய தரப்புக்கு சீனா வேண்டுகோள்
• வெள்ளத்தால் பிகார் மாநிலத்தில் 253பேர் சாவு
• சீனா மீதான ஆய்வுக்கு சீன வணிக அமைச்சகம் எதிர்ப்பு
• பெய்ஜிங்-தியேன்சின் செல்லும் 'ஃபூ ஷிங்' எனும் அதிவிரைவுத் தொடர்வண்டி சேவை துவக்கம்
• தொடரவல்ல வளர்ச்சி நிரலைச் செயல்படுத்துவதில் சீனா பெற்றுள்ள சாதனை
• தென் கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவ பயிற்சி துவக்கம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040