• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
  2017-08-08 16:21:38  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆசியான் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான பிலிப்பைன்ஸின் அரசுத் தலைவர் ரோட்ரிகோ டூடெர்டுக்கு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஆகஸ்டு 8ஆம் நாள் செய்தி அனுப்பி, ஆசியான் உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக, பிரதேச அமைதி மற்றும் நிலைப்பு தன்மையைப் பேணிக்காப்பதற்கு ஆசியான் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக பலதுருவமயமாக்கத்தில் பிரதிநிதித்துவம் வாய்ந்த ஆற்றலாக இது விளங்கியுள்ளது. ஆசியான் பொது சமூக கட்டுமானம், மேலும் பெரிய வளர்ச்சியைப் பெற்று, ஆசியான் நாடுகளின் மக்களுக்கு மேலதிக நலன்களை வழங்க வேண்டுமென சீனா விரும்புகிறது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040