• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி சீன-இந்திய உறவுடன் தொடர்புயில்லை:ரஷியா
  2017-08-18 09:13:59  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியாவும் இந்தியாவும் மேற்கொள்ளவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியை தற்போதைய சீன-இந்திய உறவுடன் இணைக்கும் கூற்று நியாயமற்றது என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா சக்காரொவா தெரிவித்துள்ளார்.
17ஆம் நாள் மாஸ்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், திட்டப்படி இந்திரா 2017 எனும் ரஷிய-இந்திய கூட்டு ராணுவப் பயிற்சி அக்டோபர் திங்களில் நடைபெறும். இது ஒரு வழக்கமான ராணுவப் பயிற்சியைகும். இதனை தற்போதைய சீன-இந்திய உறவுடன் இணைக்கும் கூற்று குழப்பம் விதைக்கும் செயலாகும் என்று கூறினார். தேவை இருந்தால், உண்மைகளைத் தெளிவுப்படுத்தும் விதமாக ரஷியா தொடர்புடைய தகவல்களை வெளியிடும் என்றும் சக்காரொவா குறிப்பிட்டார். (வாணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040