APP மென்ஒருங்கு
2014-05-05 09:42:05  cri

நண்பர்களே, வணக்கம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, இணையம் போன்ற சேவைகளை நேயர்கள் எளிதாக அனுபவிக்க வசதி அளிக்கப்படும் வகையில், கைபேசிகளில் இயங்கும் "Tamil-CRI"எனும் மென்ஒருங்கை உருவாக்க தமிழ்ப் பிரிவு பெரிதும் முயற்சி எடுத்துள்ளது.

இப்போது,ஆன்டிராய்டு[Android] மற்றும் ஐஃபோன்[IPhone] கைபேசியில் இயங்கும் மென்ஒருங்கு வெளியாகியுள்ளது. அதன் சோதனைப் பதிப்பு தற்போது வழங்கப்படுகிறது.

ஆன்டிராய்டு மென்ஒருங்குப் பயன்பாட்டுக் குறிப்புகள்:

ஒன்று, கைபேசி மூலம் இப்பக்கத்தில் உலா வந்து, மென்ஒருங்கு பதிவிறக்கம் செய்ய விரும்பினால் இங்கே சொடுக்கவும்,

இரண்டு, தமிழ் எழுத்துக்களை உங்கள் கைபேசியில் இயல்பாக காணும் வகையில், ஆன்ராய்டு இயங்குதளத்தின் பதிப்பு 4.0க்கு மேல் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றோம்.

ஐஃபோன் மென்ஒருங்குப் பயன்பாட்டுக் குறிப்புகள்:

இந்த APPஐ Iphone செல்லிடபேசியில் பதிவிறக்கும் வகையில், APP Storeக்கு செல்லுங்கள். பின், cri tamil என்ற முக்கிய சொற்களைத் தட்டச்சுச் செய்து தேடி கண்டுபிடியுங்கள்.
இந்த APPயில் ஒலிபரப்பு நிகழ்ச்சி, புதிய செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்பு என முக்கிய நான்கு பகுதிகள் இடம்பெறுகின்றன.