ஏபெக் கூட்டத்தில் அமெரிக்க அரசுத் தலைவரின் வருகைக்கு வரவேற்பு
2014-10-30 19:37:07 cri
அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கும் ஏபெக் அமைப்பின் தலைவர்களது அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும் சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. இப்பயணத்தின் மூலம் இரு தரப்பின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்றச் சீனா விரும்புவதாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹோங்லேய் 30ஆம் நாள் தெரிவித்தார்.