தாராள வர்த்தக மண்டலத்துக்கு தடையில்லை
2014-11-04 19:04:54 cri
ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கத்துக்கான பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு சீன வணிக அமைச்சரின் உதவியாளர் வாங் ஷொவ்வென் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் பதிலளித்தார். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது, ஏபெக் அமைப்பின் 21 உறுப்பு நாடுகளின் பொது விருப்பமாகும். இதுவரை அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதில் எந்த தடையும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.