தெற்காசிய நாடுகளுக்கு நன்மை கொண்டு வரும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை: இந்திய மூத்த ஊடகவியலாளர்
2016-03-11 17:00:01  cri

சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுச் தேசிய கமிட்டியின் ஆண்டுக் கூட்டத் தொடர்கள் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகின்றன. அதேவேளையில், அண்டை நாடான இந்தியாவின் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த இரு அவைகளின் உறுப்பினர்கள், புதிய நிதியாண்டின் நிதி வரவுச் செலவுத் திட்டத்தை ஆலோசித்து வருகின்றனர். ஆசியாவின் முக்கிய பொருளாதார நாடுகளான சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவின் சஹாரா ஊடக நிறுவனத்தின் வெளிவிவகாரத் துறையின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான பிஜிந்திரா சிங் இது பற்றி பேட்டி அளிக்கையில் சீனாவின் ஆண்டுக் கூட்டத் தொடர்களுக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் நிதி வரவுச் செலவுத் திட்டத்தின் கூட்டத் தொடருக்கும் இடையே அதிக ஒத்த அம்சங்கள் இடம்பெறுகின்றன என்று தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றியும் அவர் பேசுகையில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் நடைமுறையாக்கம், சீனாவின் சர்வதேச வர்த்தக துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் அதேசமயம், நெடுகிலுள்ள நாடுகளின் வர்த்தக அதிகரிப்பைத் தூண்டும். குறிப்பாக, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலான தெற்காசிய நாடுகளின் வர்த்தகம் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தார்.