ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய தகவல்கள்
2016-08-11 11:18:04  cri

10ஆம் நாள் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாளாகும். அன்று பிற்பகல் நடைபெற்ற 59 கிலோவுக்கான மகளிர் பளுதூக்கும் ஆட்டத்தில், சீன வீராங்கனை சியாங் யன் மெய் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் சீனா பெற்ற ஒன்பதாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

சீன விளையாட்டு வீரர் சேங் சுன் சாவ் 90 கிலோவுக்கான ஆடவர் ஜூடோ இறுதி ஆட்டத்தில் வெண்கல பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வரலாற்றில் ஜூடோ விளையாட்டுப் பிரிவில் சீன விளையாட்டு வீரர் ஒருவர் பதக்கத்தைப் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

உள்ளூர் நேரப்படி 10ஆம் நாளிரவு 6 மணி வரை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா பத்து தங்கப் பதக்கங்களுடன் பத்தக வரிசையில் முதலிடம் வகிக்கின்றது. சீனா மற்றும் ஜப்பான் பதக்க வரிசையில் இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.