தரை மற்றும் கடல்வழி பட்டுப் பாதையில் நல்ல வணிக வாய்ப்புகள்
2017-08-07 16:46:03  cri

சீனாவினால் முன்வைக்கப்பட்ட ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற தரை மற்றும் கடல்வழி பட்டுப் பாதைக் கட்டுமானம் மீது மேலை நாடுகள் நல்ல எதிர்பார்ப்பு கொள்வதோடு, அதில் இருந்து குறிப்பிடத்தக்க வணிக நலன்களைப் பெற்று கொண்டுள்ளன என்று தி எக்கானொமிஸ்ட் எனும் பிரிட்டன் இதழ் 5ஆம் நாள் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில் பத்துக்கும் அதிகமான நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளில், சாலைகள், இருப்புப்பாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் கட்டுமானங்களில், மேலை நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள், அதிக வாய்ப்புகளை பெறுகின்றன. உபகரணங்கள், தொழில் நுட்பங்கள், சேவை ஆகியவற்றின் ஏற்றுமதிகளில் இந்த பன்னாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்று அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தில், அமெரிக்காவின் ஜி.ஈ. நிறுவனம், 230கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள முன்பதிவுகளை பெற்றுள்ளது. இந்தத் தொகை, 2015ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 2 மடங்குகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கெடேர்பில்லர், ஹோனிவேல், ஏ.பி.பி, டி.எச்.எல், பாஸ்ஃப் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் இதில் இருந்து நலன்களை பெற்றுள்ளன என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது