ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
2017-08-08 14:21:27  cri
கொரிய தீபகற்ப பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்று ஈரான் அரசுத் தலைவர் ஹாசான் ரோஹானி 6ஆம் நாள் தெஹரானில் வட கொரிய உச்ச மக்கள் அவையின் நிரந்தர தலைவர் கிம் யூங்நாமைச் சந்தித்துரையாடிய போது தெரிவித்தார்.

வட கொரியாவும் தென் கொரியாவும் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும். இதன் வழி, ஆசியா முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பை நனவாக்கலாம் என ரோஹானி விருப்பம் தெரிவித்தார். எல்லா நாடுகளுக்கும் உரிய மதிப்பளிக்கப்பட வேண்டும். பிற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடும் செயல்கள் எல்லாம் தவறானவை என்றும் அவர் கூறினார்.

ரோஹானி, ஈரானின் அரசுத் தலைவர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டதை கிம் யூங்நாம் வாழ்த்தினார். ஈரானுடன் பொருளாதாரம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்க வட கொரியா விரும்புவதாகவும் கிம் யூங்நாம் தெரிவித்தார்.

5ஆம் நாள் ரோஹானி அரசுத் தலைவராகப் பதவி ஏற்றி தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் துவக்கினார். வட கொரியாவின் சார்பில் கிம் யூங்நாம் ரோஹானியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.