கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
2017-08-08 16:29:22  cri
வட கொரிய வெளியுறவு அமைச்சர் லீ யூங்ஹோவின் பெயரிட்ட அறிக்கையை, ஆகஸ்டு 7ஆம் நாள் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற ஆசியான் நாடுகளின் கருத்தரங்கில் கலந்து கொண்ட வட கொரியப் பிரதிநிதிக் குழு செய்தியாளர்களிடம் வெளியிட்டது. கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்காவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கும் வகையில், வட கொரியா அணு ஆயுத ஆற்றலைப் பெற வேண்டும். இந்நிலையில், அமெரிக்காவைத் தவிர, இதர நாடுகளின் மீது, வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டாது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)