இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
2017-08-08 17:55:25  cri
கடந்த நவம்பர் முதல் காஷ்மீர் எல்லை பகுதியில் இந்தியப் படை வீரர்கள் 319 முறை இரு தரப்பு போர் நிறுத்த உடன்படிக்கையை அத்துமீறியுள்ளனர் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
திங்கள்கிழமை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவையில் அவர் கூறுகையில், இந்திய தரப்பு அப்பாவில் மக்களை இலக்காக்கி சுட்டுக்கொன்றதாக குற்றம் சாட்டி, 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 66 பாகிஸ்தான் மக்கள் இதில் கொல்லப்பட்டதாகவும் 228 பேர் காயமுற்றதாகவும் கூறினார்.
சர்வதேச சமூகத்தின கவனத்தை இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல் நடவடிக்கைகளிலிருந்து மாற்றிக்கொள்வது இந்திய படையின் இச்செயலின் நோக்கமாகும் என்று அவர் தெரிவித்தார்.
2003ஆம் ஆண்டு காஷ்மீர் பிரதேசத்தில் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதென இரு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. ஆனால், இவ்வுடன்படிக்கையை மீறி செயல்படுவதை அவை ஒன்றின் ஒன்று மீது குறைக் கூறி வருகின்றன. (வாணி)