அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
2017-08-09 11:09:51  cri
சீன ஸிச்சுவான் மாநிலத்தின் அபா சோவிலுள்ள சியுச்சேய்கோ வட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் நாள் 21:19 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 7ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. 9ஆம் நாள் காலை 5மணி வரை, நிலநடுக்கத்தால், 9பேர் உயிரிழந்தனர். 164பேர் காயமடைந்தனர்.

பாதிப்பு நிலையைக் கூடிய விரைவில் அறிந்து மீட்புதவிப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, உடனடியாக கட்டளையிட்டார். காயமடைந்தோரை முழு மூச்சுடன் மீட்க வேண்டும். பயணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை உகந்த முறையில் குடியமர்த்த வேண்டும். இயன்ற அளவில் மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் உத்தரவிட்டர்.

நிலநடுக்க நிலைமையின் கண்காணிப்பை வலுப்படுத்தி நிலநடுக்கத்தால் ஏற்படக் கூடிய பேரழிவைத் தவிர்க்க வேண்டும் என்று சீனத் தலைமை அமைச்சர் லீக்கெச்சியாங் கட்டளையிட்டார்.