பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு பற்றி தென் ஆப்பிரிக்காவுக்கு சீனத் தூதரின் கருத்து
2017-08-25 16:07:41  cri

தென் ஆப்பிரிக்காவுக்கான சீனத் தூதராக லின் சுங் தியன் 24ஆம் நாள் பதவி ஏற்றதற்குப் பின் முதன்முறையாக செய்தி ஊடக மற்றும் சிந்தனை கிடங்கு பிரமுகர்களுடன் சந்திப்பு நடத்தி, சீன-தென் ஆப்பிரிக்க ஒத்துழைப்பு, சீன-ஆப்பிரிக்க உறவு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி பன்முகங்களிலும் அறிமுகப்படுத்தினார்.

2006 முதல் 2016ஆம் ஆண்டு வரை பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்ட முதல் பத்து ஆண்டுகள் பொற்காலங்கள் என்றும், ஒத்துழைப்பில் ஊக்கம் தரும் வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் மொத்தப் பொருளாதார அளவு, உலகப் பொருளாதாரத்தில் வகிக்கும் விகிதாசாரம், 12 விழுக்காடு முதல் 23 விழுக்காடாக உயர்ந்துள்ளது. மொத்த வர்த்தக தொகை, உலகப் பொருளாதாரத்தில் வகிக்கும் விகிதாசாரம், 11 விழுக்காடு முதல் 16 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதோடு, ஐ.நாவை மையமாக கொண்ட பலதரப்புவாதத்தை பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வமாக ஆதரித்து, பயங்கரவாதம், தொற்று நோய், காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலக அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்துள்ளன என்றும், உலக பலதுருவமயமாக்கம் மற்றும் உலக மேலாண்மையின் ஜனநாயகமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான முக்கிய சக்தியாக பிரிக்ஸ் நாடுகள் மாறியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். (மீனா)