4ஆவது சர்வதேச அரிசி எண்ணெய் மாநாடு 24ஆம் நாள் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்றது. மருந்து பொருட்கள், ஒப்பனைப் பொருட்கள், உணவு முதலிய துறைகளில் அரிசி எண்ணெய்க்கான ஆய்வு மற்றும் பயன்பாடு குறித்து, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, தாய்லாந்து முதலிய 20க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் விவாதித்துள்ளனர்.
இம்மாநாட்டில் தாய்லாந்து துணை தலைமையமைச்சர் உரை நிகழ்த்துகையில், அரிசி எண்ணெய் தொழிற்துறையின் வளர்ச்சியில் தாய்லாந்து அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொழிற்துறை, ஆசியாவின் தானிய பாதுகாப்பு பிரச்சினையை தணிவு செய்வதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து நாடுகளாலும் கவனம் செலுத்தப்படத்தக்கது என்று கூறினார்.(ஜெயா)