வெனிசூலா மீது பொருளாதாரத் தடை நடவடிக்கை மேற்கொள்வது பற்றிய நிர்வாக கட்டளையில் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை ஆகஸ்டு 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெனிசூலா அரசு மற்றும் அந்நாட்டின் அரசு சார் எண்ணெய் நிறுவனத்தின் புதிய கடன் மற்றும் பங்கு வர்த்தகத்தில் அமெரிக்க நிதி அமைப்புகள் பங்கெடுக்கத் தடை செய்யப்பட்டது. மேலும், வெனிசூலாவின் பொது அமைப்புகள் வினியோகிக்கப்பட்டுள்ள கடன் பத்திர வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்கள் கலந்து கொள்ள மாட்டாது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பூங்கோதை)