அமெரிக்காவில் ஹார்வே புயலின் தாக்குதல்
2017-08-27 15:50:04  cri

ஹார்வே என்ற பெரும் புயல், உள்ளூர் நேரப்படி 25ஆம் நாளிரவு டெக்ஸாஸ் மாநிலத்தின் ரொக்பொர்ட் எனும் துறைமுகப் பகுதியில் கடந்தது. அதற்கு பிறகு 24 மணிகளுக்குள் குறைந்தது 3 பேர் உயிரிழந்ததோடு, டெக்ஸாஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு,சுழல் காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளில் 4 சூறைக்காற்று வீசியுள்ளன. இதனால், வீடுகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவை கடும் சேதமடைந்தன என்று உள்ளூர் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசிய பெரும் புயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தேசிய வானிலை மையம் மீண்டும் வெளியிட்ட அறிவிப்பில், ஹார்வே புயல் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகமாகக் குறைந்துள்ள போதிலும், அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் சுழல் உள்ளிட்ட இயற்கைக் சீற்றங்கள் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளது.