சீனாவின் முன்னோடி மாதிரியாக உருவாகும் சென்சென்

மதியழகன் 2019-08-22 15:17:14
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் தனிச்சிறப்பு மிக்க சோஷலிசத்தின் முன்னோடி மாதிரியாக சென்சென்னை உருவாக்க ஆதரவு அளிக்கும் விதமாக, சீன அரசு சமீபத்தில் ஓர் ஆவணத்தை வெளியிட்டது. இந்த ஆவணத்தில், குவாங்துங் – ஹாங்காங் - மக்கௌ பெரும் விரிகுடா பகுதிக் கட்டுமானத்தை முன்னெடுக்க சென்செனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவாங்துங் - ஹாங்காங் - மக்கௌ பெரும் விரிகுடா பகுதியில், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசங்களும் குவாங்துங் மாநிலத்தின் 9 நகரங்களும் உள்ளன. உலக தரநிலை நகர்களின் குழு, சர்வதேச நிலை அறிவியல் தொழில்நுட்ப புதுமையாக்கல் மையம், சீனப் பெருநிலப் பகுதிக்கும் ஹாங்காங், மக்கௌ பிரதேசங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பு முன்மாதிரி ஆகியவற்றை இலக்கிட்டு, குவாங்துங் - ஹாங்காங் - மக்கௌ பெரும் விரிகுடா பகுதியைக் கட்ட சீனா விரும்புகிறது.

இது பற்றி சீனப் பன்னோக்க வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் ச்சியு ஜியன் கூறுகையில், முன்னோடி மாதிரியை உருவாக்கும் சென்சென், குவாங்துங் – ஹாங்காங் - மக்கௌ பெரும் விரிகுடா பகுதிக் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான மிக முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார்.

மேலும், சென்சென்னை முக்கிய களமாகக் கொண்டு, தேசிய நிலை பன்னோக்கு அறிவியல் மையத்தைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. இது பற்றி, ஹாங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் யே யூரூ பேசுகையில்,

அறிவியல் ஆய்வாளரான நாங்கள், இதனை ஓர் அரிய வாய்ப்பாகக் கருதுகின்றோம். ஹாங்காங் மற்றும் பெருநிலப் பகுதியைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல்பட்டால், கூடுதலான பயன் பெறலாம் என நம்புகின்றோம் என்று குறிப்பிட்டார்.

சென்சென், ஹாங்காங், மக்கௌ ஆகியவற்றுக்கிடையேயான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சென்சென்னில் வாழும் ஹாங்காங் மற்றும் மக்கௌ மக்கள், தங்களது வாழ்க்கையில், சென்சென் நகரவாசிகள் போன்ற நலன்களை பெறும் வித்த்தில், சென்சென் செயல்பட வேண்டும் என்றும் இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி, ஹாங்காங் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஹுவாங் யூஷான், ஹாங்காங்கின் திறமைசாலிகள், சென்செனின் முன்னோடி மாதிரிப் பகுதியின் கட்டுமானத்தின் மூலம் பெரும் வாய்ப்புகளை பெறுவதாக தெரிவித்தார்.

ஹாங்காங் இந்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம், குவாங்துங்-ஹாங்காங்-மக்கௌ பெரும் விரிகுடா பகுதிக் கட்டுமானம் மற்றும் வளர்ச்சியை கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்றும் ஹுவாங் யூஷான் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்