மேம்பட்டு வரும் வளர்ச்சிப் பாதையில் ஷன் சி மாநிலம்

சிவகாமி 2019-09-06 11:31:07
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மூலவளங்களைச் சார்ந்திருந்த பாதையிலிருந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், சுற்றுசூழல் பாதுகாப்பு முதலிய தொழிற்துறைகளைப் பெரிதும் வளர்ப்பதில் ஷன் சி மாநிலம் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், வெளிநாட்டுத் திறப்பையும் இடைவிடாமல் விரிவாக்கி வருகின்றோம் என்று ஷன் சி மாநிலத்தின் கட்சிக் கமிட்டியின் செயலாளர் லுயோ ஹுனிங் செப்டம்பர் 5ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட கடந்த 70 ஆண்டுகளாக, ஷன் சி மாநிலத்தில், தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன மக்கள் குடியரசு கட்டுமானத்துக்கு ஷன் சி மாநிலம் முக்கியப் பங்காற்றி வருகின்றது. கடந்த ஆண்டில், ஷன் சி மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, 1 இலட்சத்து 68 ஆயிரம் கோடி யுவான் ஆகும். மாநில மக்களின் நபர்வாரி மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 45 ஆயிரம் யுவானைத் தாண்டியது. கடந்த 2 ஆண்டுகளாக, ஷன் சி மாநிலத்தில் நிலக்கரி உற்பத்தி, சராசரியாக 1.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. தயாரிப்புத் தொழிலில் சராசரியாக 9 விழுக்காடுஅதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், உயிரி மருத்துவம் மற்றும் மருந்து முதலிய தொழிற் துறைகளும் விரைவாக வளர்ந்து வருகின்றன என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையை ஷன் சி மாநிலம் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றது. தவிரவும், பொருளாதாரச் செயல் மற்றும் உயிரினச் சுற்றுச்சூழலின் மேம்பாட்டை நடைமுறைப்படுத்தி வருகின்றது என்று ஷன் சி மாநிலத்தின் தலைவர் லோ யாங்செங் தெரிவித்தார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தில் ஷன் சி மாநிலம் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, சீன அரசு நடைமுறைப்படுத்திய பெய்ஜிங்- தியன் சின்-ஹெ பெய் கூட்டு வளர்ச்சியின் முக்கிய வாய்ப்பை ஷன் சி மாநிலம் நன்கு பயன்படுத்தி வருகிறது. ஷன் சி மாநிலத்தின் பிரதேச மேம்பாட்டை வெளிப்படுத்தி, பெய்ஜிங்- தியன் சின்-ஹெ பெய் கூட்டு வளர்ச்சியில் சேர்வதற்கு முன்னுரிமை அளிப்போம் என்று லோ யாங்செங் கூறினார்.

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, ஷன் சி மாநிலத்தில் கையொட்டமான வெளிநாட்டு முதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை, ஆயிரத்து 400 ஆகும். முழு மாநிலத்திலுள்ள வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 371 அதிகரித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்