உலக வளர்ச்சியில் முக்கிய உந்து சக்தியாக விளங்கி வரும் சீனா

மதியழகன் 2019-04-11 18:44:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மார்ச் திங்களில், சி.பி.ஐ., பி.பி.ஐ. என்ற நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் உற்பத்தியாளர்களின் விலைக் குறியீடு ஆகியவை உயர்ந்துள்ளன என்று சீனத் தேசிய புள்ளிவிவர பணியகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய அறிக்கையில், 2019ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது, உலகின் பெரிய பொருளாதார நாடுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள ஒரேயொரு நாடாக சீனா விளங்குகிறது.

வர்த்தகச் சர்ச்சை, நாணயக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகல், பிராந்தியக் கொந்தளிப்பு ஆகிய காரணங்களாக, 2019ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் எதிர்பார்ப்பு இலக்கு குறைக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சீனா இத்தகைய பொருளாதார வளர்ச்சிச் சாதனையை அடைவது உண்மையில் எளிமையல்ல. கடந்த ஆண்டு முதல், சீர்திருத்தங்களை ஆழமாக்கி, திறப்பு நிலையை விரிவாக்குவதற்கான பல நடவடிக்கைகளை சீனா செயல்படுத்தி வருகிறது. இவற்றில், பெருமளவில் வரி மற்றும் பல்வகை கட்டணங்களைக் குறைப்பது, சந்தை நுழைவுக் கட்டுப்பாட்டை தளர்த்துவது, தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவது, அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பை வலுப்படுத்தி காப்புரிமைச் சட்டத்தைத் திருத்துவது, அந்நிய முதலீட்டுச் சட்டத்தை வகுப்பது ஆகியவை இடம்பெற்றுள்ளன. அனைத்து நடவடிக்கைகளும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் நம்பிக்கையை உயர்த்தி, சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய முன்மதிப்பீட்டின்படி, 2019ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காட்டாகும். இந்த வளர்ச்சி சதவீதம் எப்படி பார்க்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. ஒருபுறம், உலகில் 2ஆவது இடம் பிடித்து, கடந் த ஆண்டில் 90 லட்சம் கோடி யுவானைத் தாண்டிய சீனப் பொருளாதாரம், ஒவ்வொரு சதவீதமும் அதிகரிக்கும் அடிப்படையில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பங்களிப்பை அளிக்கும். மறுபுறம், மிக அதிக பொருளாதார மதிப்பு கொண்ட உலகின் முன்னிலை வகிக்கும் 5 நாடுகளில், சீனாவின் பொருளாதரா வளர்ச்சி முதலிடத்தில் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, உலகப் பொருளாதார வளர்ச்சியின் வலுவான உந்து சக்தியாக சீனா தொடர்ந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், உலகப் பொருளாதார வளர்ச்சியில் உலக நாடுகளின் முயற்சி அவசியமாகும். தற்போது, முன்பு இல்லாத அளவிலான பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய சுற்று தொழில் புரட்சி வாய்ப்புகளும், உலகப் பொருளாதார மறுமலர்ச்சியின் மந்த நிலை, வர்த்தகப் பாதுகாப்புவாதம் ஆகிய அறைகூவல்களும் ஒரேசமயத்தில் நிலவுகின்றன. இந்த சூழலில், உலகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு, உலக நாடுகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் விடுக்கப்பட்ட வேண்டுகோளைப் போலவே, உலக நாடுகள், வர்த்தக வேறுபாடுகளைக் களைந்து, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரின் நம்பிக்கையை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்