பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

2017-08-21 14:37:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 19ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினார். தென்னாப்பிரிக்க சர்வதேச உறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் மஷபானொ, பிரேசில் வெளியுறவு அமைச்சர் நுனேஸ், ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரொவ், இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

வாங்யீ பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர் பதவி வகிக்கும் சீனா, இதர 4 நாடுகளுடன் இணைந்து, பிரிக்ஸ் நாடுகளின் 2ஆவது பொன் காலத்தை தொடங்க விரும்புகிறது என்று தெரிவித்தார். மேலும், பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 9ஆவது பேச்சுவார்த்தை செப்டம்பரில் சியாமென் நகரில் நடைபெறும். இந்த முக்கியமான பேச்சுவார்த்தை பிரிக்ஸ் நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்புக்கு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதர 4 நாடுகளுடன் சேர்ந்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்