பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முதல் பங்கேற்பு

2017-08-25 14:09:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முதல் பங்கேற்பு

2013ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 5வது பேச்சுவார்த்தை, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் கலந்துகொள்வது இது முதல்முறை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நகருக்குச் சென்று, பிரிக்ஸ் நாடுகள் தொடர்பான நினைவு குறித்து விளக்கிக்கூறுகின்றோம்.


டர்பன், தென் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமாகும். இதன் கிழக்குப் பகுதியில் இந்திய பெருங்கடலாகும். இந்நகரம், உலகில் புகழ்பெற்ற சுற்றுலா காட்சியிடமாகும். தவிரவும், இந்நகரம், புகழ்பெற்ற கூட்ட நகரமாகும். மித வெட்ப மண்டலத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள எழில் மிக்க கடற்கரை, பல்வகை பண்பாடுகள், ஈர்ப்பு மிக்க ஓய்விட நடவடிக்கைகள் முதலியவை இந்நகரின் சிறப்புகளாகும். 2013ஆம் ஆண்டு, பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தையை தென் ஆப்பிரிக்கா முதல்முறையில் நடத்தியது. இந்நகரில் சர்வதேச கூட்ட மையத்தில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது, இக்கூட்ட மையத்தின் நுழைவாயிலில் நுழைந்த போது, பிரிக்ஸ் நாடுகள் உச்சிமாநாடு பற்றிய சின்னம் தெளிவாக பார்க்க முடிகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முதல் பங்கேற்பு

2013ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, கையோடு கை கோர்த்து ஒத்துழைத்து, கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்துவது என்ற தலைப்பில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் முக்கிய உரைநிகழ்த்தினார். அமைதியைப் பேணிக்காத்து, வளர்ச்சியைத் தேடி, ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, கூட்டு நலன்களைத் தேடுவது, எங்களுடைய பொது விருப்பமாகவும் பொறுப்பாகவும் இருக்கிறது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, சீனாவின் தூதாண்மை கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை சீனா தொடர்ந்து மேம்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளின் பொருளாதாரத்தின் வலிமையை விரைவுபடுத்தி, ஒத்துழைப்பு கட்டுகோப்பை ஆழமாக்கி, ஒத்துழைப்புச் சாதனைகளை அதிகரித்து, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நலன்களை கொண்டு வர வேண்டும். உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்