பிரிக்ஸ் கூட்டுறவை பன்முகமாக ஆழமாக்கி, ஒளிமிக்க எதிர்காலத்தை திறந்து வைக்க ஷிச்சின்பிங் வலியுறுத்தல்

மதியழகன் 2017-09-04 15:06:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் 9ஆவது உச்சி மாநாடு, 4ஆம் நாள் சீனாவின் சியாமென் நகரிலுள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.  சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கியதோடு,  இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், பிரேசில் அரசுத் தலைவர் மிஷெல் டெமர்,  தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்  ஜேக்கப் ஜுமா ஆகியோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில், பிரிக்ஸ் கூட்டுறவை ஆழமாக்கி, மேலும் ஒளிமிக்க எதிர்காலத்தைத் திறந்து வைப்பது என்ற தலைப்பில் ஷிச்சின்பிங் உரை நிகழ்த்தினார்.

உலக ஒழுங்குமுறையில் ஆழமான மற்றும் சிக்கலான மாற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு மேலும் முக்கியமானது. எதிர்காலத்தில்,  பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுப்பது, நெடுநோக்கு வாய்ந்த வளர்ச்சித் திட்டங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பது, சர்வதேச ஒழுங்குமுறை நேர்மையாகவும் நியாயமாகவும் வளர்வதை முன்னேற்றுவது,  மனிதர் மற்றும் கலாசாரத் தொடர்பை ஊக்குவிப்பது ஆகிய நான்கு இலக்குகளுக்காக தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தனது உரையில் வலியுறுத்தினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்